மனிஷா கொய்ராலாவுடன் நடித்த அனுபவம் பற்றி ஷாம் பேட்டி

மனிஷா கொய்ராலாவுடன் நடித்த அனுபவம் பற்றி ஷாம் பேட்டி

மனிஷா கொய்ராலாவுடன் நடித்த அனுபவம் பற்றி ஷாம் பேட்டி

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2016 | 3:42 pm

‘ஒரு மெல்லிய கோடு’ எனும் படத்தில் மனிஷா கொய்ராலாவுடன் இணைந்து நடித்துள்ளார் ஷாம்.

இந்தப் படம் குறித்து ஷாம் கூறியதாவது:

‘படத்தில் நெகடிவ் நிழல் விழும் பாத்திரம் எனக்கு. இதில் இரண்டு ஜோடிகள் ஒருவர் மனிஷா கொய்ராலா, இன்னொருவர் அக்ஷாபட். ஷாமுக்கு மனிஷா ஜோடியா என்று எல்லாரும் ஆச்சரியமாகக் கேட்கிறார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அந்தப் படம் பதில் சொல்லும்.

தமிழைத் தவிர இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி மொழிகளிலும் பல படங்களில் மனிஷா நடித்துள்ளார். அவர் பெரிய பெரிய கதாநாயகர்களுடன் நடித்த பெரிய நட்சத்திரம். அனுபவசாலியும் கூட. ஆனாலும் தன்னுடன் யார் நடிக்கிறார்கள் என்பதைவிட கதையும் பாத்திரமும் பிடித்ததால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

முதலில் அவருடன் நடிக்கும் போது எப்படி நடந்து கொள்வது, எப்படி எடுத்துக்கொள்வாரோ என எனக்குள் பதற்றம், குழப்பம். ஆனால் அவர், சகஜமாக்கி விட்டார். நான் நடித்த படங்கள் பற்றிக் கேட்டார். அதில் ‘6’ படத்தை எனக்காகப் பார்த்தார். பாராட்டினார். அதில் என் தோற்றம் பற்றிக் கேட்டார். குறிப்பாகப் படத்தில் வரும் என் கண் வீக்கம் பற்றி விசாரித்தார். எப்படி இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார். நானும் மேக்கப்மேனும் கஷ்டப்பட்டுச் செய்ததுதான் அது என்றேன். அதைப் பற்றி ரொம்பவே ஆர்வமாக விசாரித்தார். பாராட்டவும் செய்தார். அவருடன் இப்படத்துக்காகப் பேங்கொக்கில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது நல்ல அனுபவம்.

ஒரு மெல்லிய கோடு படப்பிடிப்பு அனுபவம் பற்றி நிறையவே சொல்லலாம் செட்டுக்குள் மனிஷா வந்து விட்டால் முதலில் மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுவார். மற்றவர்களையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிடச் சொல்வார். அந்த அளவுக்கு தொழில் பக்தி, நேர்மை, உண்மையாக இருப்பார். உடம்பைச் சரியாகக் கவனித்துக் கொள்வார். கேன்சர் பாதிப்பு வந்து மீண்டு வந்து இருக்கிறார். அதனால் தினசரி உடற்பயிற்சி, யோகா, தியானம் என்று கவனமாக இருப்பார்.

இதில் நடிக்கும் போது முதல் படத்தைப் போல கவனம், அக்கறை, நிதானம் இருந்ததே தவிர ஏதோ சும்மா வந்துவிட்டோம் நடிப்போம் என்கிற அலட்சியம் இருந்தது இல்லை. மொழி தெரியா விட்டாலும் கூட தெரிந்தமாதிரி சிறப்பாக நடிப்பவர்,

என்று கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்