தேசிய கல்வி கலாசாலைக்கான மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பம்

தேசிய கல்வி கலாசாலைக்கான மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பம்

தேசிய கல்வி கலாசாலைக்கான மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2016 | 7:11 am

தேசிய கல்வி கலாசாலைக்கான மாணவர்களை சேர்த்து கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த வாரமளவில் இடம் பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் தடவையாக பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிலவும் வெற்றிடங்களை கருத்திற் கொண்டு ஆசிரிய மாணவர்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் பிரகாரம் இம்முறை விஞ்ஞான பாட நெறிக்காக 3,700 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.

பிரதேச செயலாளர் அலுவலக மட்டத்தில் சேர்த்து கொள்ளப்படும் மாணவர்கள் பயிற்சிகளின் பி்ன்னர் குறித்த வலயங்களில் உள்ள பாடசாலைகளில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.

விஞ்ஞான பாடநெறிக்கான மாணவர்களை இணைத்து கொள்ளும் நடவடிக்கைகள் ஜனவரி மாதத்தில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்