சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2016 | 5:43 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.

இதற்கமைய, சந்தேகநபரான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் இருந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்துவரப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த பிணை மனு மீதான விசாரணை இன்று முன்னெடுக்கப்படாத நிலையில், அதனை ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வீ.சந்திரமணி உத்தரவிட்டார்.

அதற்கமைய, சந்தேகநபரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் அண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்