ஓபாத உப மின் நிலையத்தில் தீ: மின் விநியோகம் தடைப்படும் சாத்தியம்

ஓபாத உப மின் நிலையத்தில் தீ: மின் விநியோகம் தடைப்படும் சாத்தியம்

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2016 | 4:28 pm

கொட்டுகொட – ஓபாத உப மின் நிலையத்தில் மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்துள்ளமையால் சில பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்படும் சாத்தியம் உள்ளதாக மின்சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ. பெரேரா தெரிவித்தார்.

ஓபாத உப மின் நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக மின்சாரம் தடைப்படும் சாத்தியம் நிலவுகிறது.

கொட்டுகொட ஓபாத உப மின் நிலையம் நுரைச்சோலையிலிருந்து கொழும்பிற்கு மின்சாரத்தைக் கொண்டு செல்லும் கட்டமைப்புடன் இணைந்துள்ளது.

நுரைச்சோலை மின் நிலையத்தில் செயலிழந்து காணப்பட்ட இரண்டு மின் பிறப்பாக்கிகளின் செயற்பாடுகள் வழமைக்குக் கொண்டுவரப்பட்ட 2 மணித்தியாலங்களில் ஓபாத உப மின் நிலையத்தின் மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்