உபாதை காரணமாக லசித் மாலிங்க நாடு திரும்புகிறார்

உபாதை காரணமாக லசித் மாலிங்க நாடு திரும்புகிறார்

உபாதை காரணமாக லசித் மாலிங்க நாடு திரும்புகிறார்

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2016 | 9:41 pm

உபாதை முழுமையாகக் குணமாகாத நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இன்று நாடு திரும்பவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

20-20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்காக இந்தியா சென்ற குழாத்தில் லசித் மாலிங்கவும் உள்வாங்கப்பட்டிருந்தார்.

லசித் மாலிங்கவின் இடத்திற்கு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் 20-20 பயிற்சிப் போட்டியில் திறமையை வெளிப்படுத்தும் வீரரொருவருக்கு வாய்ப்பளிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஆப்கானிஸ்தான் அணி்க்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியிலும் லசித் மாலிங்க விளையாடவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்