இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை குறித்து டில்லியில் கலந்துரையாடல்

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை குறித்து டில்லியில் கலந்துரையாடல்

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை குறித்து டில்லியில் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2016 | 12:39 pm

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக் குறித்து டெல்லியில் கலந்துரைாயடல் நடத்தப்படுவதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தலைமையில் மீனவர் பிரதிநிதிகளுடன் இந்த கலந்துரையால் நடத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், மத்திய, மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்படுவதும், தொடர்ந்து நடைபெறுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழக மீனவர்கள் தங்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களை பிடிப்பதுடன், கடல் வளங்களை அழித்து வருவதாகவும், இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இதன் காரணமாக இருநாட்டுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக அமைந்துள்ளது.

இந்நிலையில், இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண, மத்திய வேளாண்மை அமைச்சர் ராதாமோகன்சிங் தலைமையில் மீனவப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் இன்று நடத்தப்படுவதா தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்