இறுதிக்கட்டத்தை எட்டியது  ‘மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்’ திட்டம்

இறுதிக்கட்டத்தை எட்டியது  ‘மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்’ திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2016 | 9:22 pm

நியூஸ்பெஸ்ட்டின் ‘மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்’ திட்டம் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியது.

இந்தப் பயணம் நாளை முற்பகல் கொழும்பில் நிறைவுபெறவுள்ளது.

கடந்த 24 நாட்களாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த மக்கள் சக்தி குழாத்தினர் இன்று அம்பாறை மகஓயாவில் பயணத்தை ஆரம்பித்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் வௌ்ளாவெளி, கொவிலியாமடுவ, சமகிபுரவசம, தெம்பிட்டிய மற்றும் பெரியபுல்லுமலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தனர்

அதனையடுத்து அம்பாறை, பொல்லேபெத்த ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிக்குச் சென்ற மக்கள் சக்தி குழுவினர் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.

மற்றைய குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் அரந்தலாவ பகுதிக்குச் சென்றிருந்தனர்.

இதேவேளை, மற்றுமொரு குழுவினர் நுவரெலியா மாவட்டத்தின் மெதகஹவத்துர விஹாரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தனர்.

மற்றையகுழுவினர் நாவலப்பிட்டி சொய்சா கெலே குடியிருப்புப் பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.

நீர்கொழும்பு அளுத்குருவ மீன்பிடி கிராமத்திலுள்ள இல்லங்கள் தோறும் எமது மற்றுமொரு குழுவினர் சென்றிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்