இன்று இரவு முதல் கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

இன்று இரவு முதல் கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

இன்று இரவு முதல் கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2016 | 10:16 am

இன்றிரவு 8 மணி முதல் கரையோர ரயில் சேவைகள் தாமதமாகுமென ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

வௌ்ளவத்தையினூடான ரயில் மார்க்கத்திலுள்ள பாலம் புனரமைக்கப்படுவதால் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றிரவு 8 மணி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 4.30 வரை கொழும்பு கோட்டையிலிருந்து கல்கிஸ்ஸை வரையும் ஒரு மார்க்கத்திலான ரயில் சேவை மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தூர இடங்களுக்கான ரயில் சேவைகளை தாமதமின்றி முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்