இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2016 | 10:02 am

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியலில் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இந்திய மீனவர்கள் 4 பேரை நேற்று (17) மாலை ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 23 ஆம் திகதி வரை அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிப்பாளர் பாலசுப்ரமணியம் ரமேஷ்கண்ணா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் காரைநகருக்கு வடக்கே காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4 மீனவர்களின் விளக்கமறியலே தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்