ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றிப் பயணத்தை ஆரம்பித்தது

ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றிப் பயணத்தை ஆரம்பித்தது

ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றிப் பயணத்தை ஆரம்பித்தது

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2016 | 6:36 am

உலகக்கிண்ண தொடரின் 16 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கையணி தனது வெற்றிப்பயணத்தை ஆரம்பித்துள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

ஆரம்பத்தில் இலங்கையணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் இறுதி ஓவர்களை தமக்கு சாதகமாக பயண்படுத்தி ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டனர்.

அஸ்கார் ஸ்டானிக்சை(Asghar Stanikzai) அதிரடியாக பெற்ற அரைச்சததுடன் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 153 பெற்றுக்கொண்டது.

47 பந்துவீச்சுகளை எதிர்கொண்ட அஸ்கார் ஸ்டானிக்சை(Asghar Stanikzai) 4 ஆறு ஓட்டங்கள் 3 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 62 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு 154 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இலங்கையணி சார்பில் சிரேஸ்ட வீரர் திலகரட்ன டில்சான் 56 பந்துவீச்சுகளை எதிர்கொண்டு 3 ஆறு ஓட்டங்கள் 8 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 83 ஓட்டங்கரளை ஆட்டமிழக்காது பெற்று வெற்றிக்கு வித்திட்டார்.

இதுதவிர இறுதி நேரத்தில் களமிறங்கிய அணித்தலைவர் மெத்யூஸ் அதிரடியாக 21 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கையின் சிரேஸ்ட வீரர் திலகரட்ன டில்ஷான் தெரிவானார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்