ஹாலி எலயில் விபத்து: மதுபான போத்தல்களை எடுத்துச் செல்ல முண்டியடித்த மக்கள்

ஹாலி எலயில் விபத்து: மதுபான போத்தல்களை எடுத்துச் செல்ல முண்டியடித்த மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2016 | 10:44 pm

விபத்து இடம்பெற்ற பகுதி சோகமயமாகவே காணப்படுவது வழமை. ஆனால், வழமைக்கு மாறாக ஹாலி எலயில் இன்று விபத்து இடம்பெற்ற இடத்தில் சிலர் மகிழ்வதைக் காணக்கூடியதாக இருந்தது.

கொழும்பில் இருந்து பதுளைக்கு மதுபானம் ஏற்றிச் சென்ற கொள்கலன் இன்று ஹாலி எல பகுதியில் விபத்துக்குள்ளானது.

விபத்தில் அதன் சாரதியும் உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் கூடிய மக்கள், கொள்கலனிலிருந்த மதுபான போத்தல்களை எடுத்துச் செல்வதில் மும்முரமாக ஈடுபட்டனர்.

பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்