வடமாகாணத்திற்கான மற்றுமொரு காணாமற்போனோர் சாட்சி விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதி

வடமாகாணத்திற்கான மற்றுமொரு காணாமற்போனோர் சாட்சி விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதி

வடமாகாணத்திற்கான மற்றுமொரு காணாமற்போனோர் சாட்சி விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதி

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2016 | 1:10 pm

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட பகுதிக்கான மற்றுமொரு கட்ட சாட்சி விசாரணை எதிர்வரும் 25 ஆம்திகதி ஆரம்பமாகவுள்ளது.

முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்த சாட்சி விசாரணைக அமர்வுகளை நடத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரகாரம் எதிர்வரும் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும், 28 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்திலும், 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் வ்வுனியா பிரதேச செயலகத்திலும் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை குறித்து சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளன.

இதுதவிர இந்த அமர்வுகளின்போது காணாமல் போனோர் தொடர்பில் புதிய முறைப்பாடுகளையும் முன்வைக்க முடியுமென அந்த ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார்.

27 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள அமர்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு மக்களுக்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இம்மாதம் முதலாம் திகதி வரை பொதுமக்களிடமிருந்து சுமார் 19 ஆயிரத்து ஆறு முறைப்பாடுகளும், பாதுகாப்புத் தரப்பில் காணாமற்போனோர் தொடர்பில் சுமார் ஐயாயிரம் முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்