மாதுருஓயா இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பம்

மாதுருஓயா இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பம்

மாதுருஓயா இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2016 | 11:18 am

மாதுருஓயா இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நோய்வாய்ப்பட்ட இராணுவ வீரர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டார்.

இந்த மரணம் தொடர்பில் இராணுவ பொலிஸாரும் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறினார்.

கதுருகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளதுடன், அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்