மஹிந்த பிரசவித்த குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது:  ரவி கருணாநாயக்க

மஹிந்த பிரசவித்த குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது:  ரவி கருணாநாயக்க

மஹிந்த பிரசவித்த குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது:  ரவி கருணாநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2016 | 9:09 pm

சிறிகொத்தவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெளிவூட்டினார்.

அவர் தெரிவித்ததாவது,

[quote]பொருளாதார நிலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார். அவர் பிரசவித்த குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஶ்ரீலங்கன் நிறுவனத்தை அரசாங்கம் தன்வசப்படுத்திய போது, 9200 மில்லியனாகக் காணப்பட்ட இலாபம், 158 மில்லியன் ரூபா நட்டமாக மாறியுள்ளது. மத்தளை விமான நிலையத்தின் ஊடாக 190 மில்லியன் ரூபா கிடைத்ததாகக் கூறினர். எனினும், எமது கணக்கில் 46 மில்லியனே காணப்பட்டது. 4600 கோடிகள்… ஏனைய பணம் பைகளுக்குள் சென்றுவிட்டதா? அதனைப்போன்று கட்டுநாயக்க அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்கு 248 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது. 35000 மில்லியன் ரூபா என நாம் அறிந்தோம். கணக்கில் 49000 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையே எமக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்