பொது எதிரணி மேடையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உரை

பொது எதிரணி மேடையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உரை

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2016 | 8:17 pm

இன்றைய தினம் பொது எதிர்க்கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டு உரையாற்றினார்.

கொழும்பு ஹைட் பார்க்கில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கான நிவாரணங்களை குறைத்தமை, மக்களை முடக்கியமை, அரசியல் பழிவாங்கல் மற்றும் வாக்களிக்கும் உரிமையை இல்லாமல் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிரணி, தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, ஜனநாயக சோசலிசக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

சோமவங்ச அமரசிங்கவும் இதில் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை, விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய மஹஜர் ஒன்றும் இதன்போது மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டது.

கூட்டம் நடைபெற்ற போது கொழும்பு – ஹைட்பார்க்கை அண்மித்த பகுதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.

 

 

 

 

1476445_1073429892717268_2543351441132551560_n  10419428_1073429916050599_8690512948409310329_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்