பொது எதிரணியின் போராட்டம் காரணமாக நகர மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் வாகன நெரிசல் 

பொது எதிரணியின் போராட்டம் காரணமாக நகர மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் வாகன நெரிசல் 

பொது எதிரணியின் போராட்டம் காரணமாக நகர மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் வாகன நெரிசல் 

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2016 | 4:42 pm

பொது எதிரணியினரின் மக்கள் போராட்டம் எனும் எதிர்ப்புக் கூட்டம் கொழும்பு – ஹைட்பார்க் மைதானத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்தக் கூட்டம் காரணமாக நகர மண்டபம் ,  யூனியன் பிளேஸ், டாலி வீதி , இப்பன்வெல மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள வீதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து இப்பன்வெல நோக்கி டாலி வீதியிலிருந்து இப்பன்வெல வரையும் வாகனங்கள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த வீதிகளுக்குப் பதிலாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், யூனியன் பிளேஸ் பகுதியிலிருந்து நகர மண்டபம் நோக்கி பயணிக்கின்ற வாகனங்களை ஜேம்ஸ் பீரீஸ் மாவத்தையினூடாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்