தெஹிவளை நால்வர் மரணம்; உடல்களின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு

தெஹிவளை நால்வர் மரணம்; உடல்களின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு

தெஹிவளை நால்வர் மரணம்; உடல்களின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2016 | 11:43 am

தெஹிவளை, கவுடான வீதியிலுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன்றினுள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நான்கு உடல்களினதும் பாகங்களை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பிரகாரம், விஷவாயுவை சுவாசித்ததன் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

ஆயினும் இந்த மரணங்கள் குறித்து மேலும் ஊர்ஜிதம் செய்துகொள்வதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

தெஹிவளை கவுடான வீதீயிலுள்ள வீடொன்றின் கீழ் மாடியின் வெவ்வேறு இடங்களில் இருந்து நால்வரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டிருந்தன.

ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, 13 வயதான மகள் மற்றும் மேலுமொரு உறவுமுறை சிறுமி ஆகியோரே உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த 65 வயதான ஹூசைன் மௌலானா இந்த வீட்டின் குடும்பத் தலைவராவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்