தென்பகுதி கடற்பரப்பில் குறைவடையும் திமிங்கிலங்களின் எண்ணிக்கை

தென்பகுதி கடற்பரப்பில் குறைவடையும் திமிங்கிலங்களின் எண்ணிக்கை

தென்பகுதி கடற்பரப்பில் குறைவடையும் திமிங்கிலங்களின் எண்ணிக்கை

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2016 | 11:10 am

தென்பகுதி கடற்பரப்பில், மிரிஸ்ஸவுக்கு அப்பாலுள்ள கடலில் வாழ்ந்துவந்த திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படுவதாக வனவிலங்குகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய படகுகள், திமிங்கிலம் மீன்களைக் கண்டதும், அதிகவேகத்துடன் படகை செலுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடற்படை மற்றும் பொலிஸாருடன் அந்த பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தபோது இந்த நிலைமையை அவதானித்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதிக வேகத்துடன் செல்லும் படகுகளுக்கு அஞ்சி திமிங்கிலங்கள் நீரின் மேற்பரப்பிற்கு வருவதில்லை என்றும் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கூறினார்.

இந்த பிரச்சினைக்கு விரைவான திட்டமொன்றை தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்