சம்பூரில் மீள்குடியேற்றக் கிராமத்திற்கு சொந்தமான 177 ஏக்கர் காணியை பொது மக்களிடம் கையளிக்க நடவடிக்கை

சம்பூரில் மீள்குடியேற்றக் கிராமத்திற்கு சொந்தமான 177 ஏக்கர் காணியை பொது மக்களிடம் கையளிக்க நடவடிக்கை

சம்பூரில் மீள்குடியேற்றக் கிராமத்திற்கு சொந்தமான 177 ஏக்கர் காணியை பொது மக்களிடம் கையளிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2016 | 1:25 pm

சம்பூரில் கடற்படையினர் நிலைகொண்டிருந்த மீள்குடியேற்றக் கிராமத்திற்கு சொந்தமான 177 ஏக்கர் காணியை பொது மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த காணியை மக்களிடம் கையளிப்பதற்கான வைபவம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

காணியை கையளிப்பதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.

சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த 237 ஏக்கரில் 60 ஏக்கர் காணி ஏற்கனவே பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

அத்துடன் அந்த பகுதியிலிருந்த சம்பூர் மகா வித்தியாலயமும் புனரமைக்கப்பட்டு மீண்டும் இயங்கக்கூடிய நிலையில் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

2006 ஆம் ஆண்டில் சம்பூரிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் பத்து ஆண்டுகளின் பின்னர் அந்த காணிகள் மீண்டும் மக்களுக்கு கையளிக்கப்படுவது குறிப்பிடத்தக்க்தாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்