காணாமற்போன ஊடகவியலாளர் தன்னைக் காப்பாற்றக்கோரும் வீடியோவை ஆராய்கிறது ஜப்பான்

காணாமற்போன ஊடகவியலாளர் தன்னைக் காப்பாற்றக்கோரும் வீடியோவை ஆராய்கிறது ஜப்பான்

காணாமற்போன ஊடகவியலாளர் தன்னைக் காப்பாற்றக்கோரும் வீடியோவை ஆராய்கிறது ஜப்பான்

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2016 | 5:52 pm

சிரியாவில் வைத்து கடந்த வருடம் ஜூன் மாதம் காணாமற்போன ஊடகவியலாளர் ஒருவர் தன்னைக் காப்பாற்றக்கோரும் வீடியோவை ஜப்பானிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஜும்பி யசூதா என்ற ஜப்பானிய ஊடகவியலாளர், தன்னைப் பாதுகாப்பாக மீட்குமாறு உதவி கோருவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஆனால் தன்னை யார் தடுத்து வைத்துள்ளார்கள், அவர்களது கோரிக்கைகள் என்னவென்பதை அவர் கூறவில்லை.

இந்த ஊடகவியலாளர் அல்-கைதாவுடன் தொடர்புடைய, அல்-நுஸ்ரா முன்னணி கிளர்ச்சிக் குழுவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய பாதுகாப்பு செய்தியாளர் ஒருவரும் ஆலோசகர் ஒருவருமாக இருவர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளால் கடந்த வருடம் சிரியாவில் கழுத்து வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த விடயத்தைக் கையாண்ட விதம் தொடர்பில் ஜப்பான் அரசு மீது விமர்சனங்கள் எழுந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

தகவல் – பிபிசி


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்