இரத்தினபுரியில் ஜனாதிபதி தலைமையில் சூழல் பாதுகாப்பு மாநாடு

இரத்தினபுரியில் ஜனாதிபதி தலைமையில் சூழல் பாதுகாப்பு மாநாடு

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2016 | 8:26 pm

இரத்தினபுரி மாவட்ட சூழல் பாதுகாப்பு மாநாடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.

சூழல் பாதுகாப்பு தேசிய திட்டத்தை சமூகமயப்படுத்தலே இரத்தினபுரி – சீவலி மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்ததாவது,

[quote]எம்மைப் போன்ற சிறிய நாடுகளுக்கு ஆலோசனை வழங்கும், எச்சரிக்கை விடுக்கும், உலகின் பலம்வாய்ந்த நாடுகள் சூழலை அதிகளவில் மாசடையச் செய்கின்றன. கடந்த சில தசாப்தங்களில் சூழல் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கொள்கைகள் மற்றும் உடன்படிக்கைகளில் எம்மைப்போன்ற சிறிய நாடுகள் கைச்சாத்திட்டு இணக்கம் தெரிவித்த போதிலும், உலகின் பலம்வாய்ந்த நாடுகள் அவற்றை நிராகரித்துள்ளன.[/quote]

இந்த மாநாட்டைத் தொடர்ந்து இரத்தினபுரி ஶ்ரீ சுமன சமன் தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்