இன்று காலை முதல் தடையின்றி மின்விநியோகம் இடம்பெறும் – அமைச்சு

இன்று காலை முதல் தடையின்றி மின்விநியோகம் இடம்பெறும் – அமைச்சு

இன்று காலை முதல் தடையின்றி மின்விநியோகம் இடம்பெறும் – அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2016 | 7:43 am

இன்று காலை முதல் தடையின்றி மக்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்க இயந்திரங்கள் நேற்றிரவு முதல் வழமைபோன்று இயங்க ஆரம்பித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார்.

இரண்டு மின் பிறப்பாக்க இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும், இதன் மூலம் 300 மெகாவட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்போடு இணைத்துக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இன்றும் மூன்று மின் பிறப்பாக்க இயந்திரங்களை இயங்கும் நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட சுட்டிக்காட்டினார்.

இதன் பிரகாரம் இன்று முதல் தடையின்றி சீராக மின்சாரத்தை விநியோகிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆயினும், நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அடுத்த வாரமளவில் அந்த குழுவின் அறிக்கை கிடைக்கவுள்ளதுடன், அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின்செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்