இன்றும் சில பகுதிகளில் மின் வெட்டு

இன்றும் சில பகுதிகளில் மின் வெட்டு

இன்றும் சில பகுதிகளில் மின் வெட்டு

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2016 | 7:32 pm

இன்று காலை முதல் மின்சாரத்தை வழமை போன்று வழங்க முடியும் என மின்சாரம் மற்றும் மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய நேற்று கூறியிருந்தார்.

எனினும், சில பகுதிகளில் இன்றைய தினமும் மின் விநியோகம் தடைப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அநுராதபுரம், மாத்தறை, கோட்டே, வத்தளை, மத்துகம, காலி, பன்னிப்பிட்டிய உள்ளிட்ட பிரதேசங்களில் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 100 மெகாவாட் மின்சாரத்தை மின் கட்டமைப்புடன் இணைத்துள்ளதாக இது தொடர்பில் நாம் வினவியபோது மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால குறிப்பிட்டார்.

சில கட்டங்களின் கீழ் தேசிய மின் கட்டமைப்புடன் மின்சாரத்தை இணைப்பதால், சில பிரதேசங்களில் இன்று காலை மின்வெட்டை அமுல்படுத்த நேரிட்டதாக அவர் கூறினார்.

இன்றிரவு முதல் முறையான மின் விநியோகத்தை வழங்க முடியும் எனவும் அனுர விஜேபால தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்