Breaking News : தெஹிவளை, கவுடான வீதியில் நால்வரின் சடலங்கள் மீட்பு

Breaking News : தெஹிவளை, கவுடான வீதியில் நால்வரின் சடலங்கள் மீட்பு

Breaking News : தெஹிவளை, கவுடான வீதியில் நால்வரின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2016 | 12:30 pm

தெஹிவளை, கவுடான வீதியிலுள்ள மூன்று மாடிக் கட்டடமொன்றிலிருந்து இன்று முற்பகல் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மின்சாரம் தாக்கி இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வீட்டின் கீழ் மாடியின் வெவ்வேறு இடங்களில் இருந்தே இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஒரே குடும்பத்தின் தந்தை, தாய், 13 வயதான மகள் மற்றும் உறவுமுறையான மற்றுமொரு சிறுமி ஆகியோர் குறிப்பிட்ட வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்