பொரளை கர்ப்பிணி பெண் மீது துப்பாக்கிச்சூடு ; மேலுமொரு சந்தேகநபர் கைது

பொரளை கர்ப்பிணி பெண் மீது துப்பாக்கிச்சூடு ; மேலுமொரு சந்தேகநபர் கைது

பொரளை கர்ப்பிணி பெண் மீது துப்பாக்கிச்சூடு ; மேலுமொரு சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2016 | 11:36 am

பொரளையில் கர்ப்பிணி பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மாத்தறை சிறைச்சாலைக்கு செல்லும் நுழைவாயிலுக்கு அருகில், சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மாத்தறை நாவிமன பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபரிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரக பத்து தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்