நிஷாந்த ரணதுங்க பிணையில் விடுதலை

நிஷாந்த ரணதுங்க பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2016 | 7:59 pm

சி.எஸ்.என் அலைவரிசையின் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிஷாந்த ரணதுங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஒரு இலட்சம் ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் நிஷாந்த ரணதுங்கவை விடுவிப்பதற்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று மாலை உத்தரவிட்டது.

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் தொடர்பில் கருத்திற்கொண்ட பின்னரே இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் நீதவான் நிஷாந்த ரணதுங்கவுக்கு உத்தரவிட்டார்.

நிஷாந்த ரணதுங்கவின் பிணை கோரிக்கையை கருத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்க முடியும் என இன்று முற்பகல் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்