நாளை முதல் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்கிறார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

நாளை முதல் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்கிறார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2016 | 9:52 pm

நாளை முதல் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.20 அளவில் பியகமவில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் பிறப்பாக்கியொன்று வெடித்ததால் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

சுமார் 10 மணித்தியாலங்களின் பின்னர் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பினாலும் இன்று வரை நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்ள முடியாமற்போயுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து தேசிய மின் கட்டமைப்புக்கு 42 வீத பங்களிப்பை வழங்கும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்தமையே இதற்குக் காரணமாகும்.

எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபை முன்னெடுத்துள்ள மின்வெட்டு காரணமாக மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்