நாட்டில் ஏற்பட்டுள்ள மின்தடை காரணமாக தொடர்ச்சியான நீர் விநியோகத்தில் சிக்கல்

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்தடை காரணமாக தொடர்ச்சியான நீர் விநியோகத்தில் சிக்கல்

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்தடை காரணமாக தொடர்ச்சியான நீர் விநியோகத்தில் சிக்கல்

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2016 | 7:06 am

மின்சாரம் துண்டிப்பு அதிகரித்த வீதத்தில் இடம்பெறுவதால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு தொடர்ச்சியாக நீரை விநியோகிப்பதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் – வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உரியவாறு மின்சாரம் கிடைக்காமையே இதற்குக் காரணமாகும் என தேசிய நீர்வழங்கல் – வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய குறிப்பிட்டார்.

ஆயினும், கொழும்பு, காலி, மாத்தறை, நீர்கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களுக்கான நீரை விநியோகிக்கும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியாலமும் மின்சாரத்தை வழங்குவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய பிரதேசங்களுக்கான நீரை விநியோகிக்கும் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகளுக்கு தேவையான மின்சாரம் துண்டிக்கப்படுவதால் இடையூறுகள் ஏற்படுவதாகவும் தேசிய நீர்வழங்கல் – வடிகாலமைப்பு சபையின் தலைவர் கூறினார்.

இதற்கமைய மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்திற்கு முன்னதாக அதுகுறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்