தெஹிவளையில் 4 சடலங்கள் மீட்பு: நச்சு வாயு காரணமாக உயிரிழந்திருப்பதாகத் தகவல்

தெஹிவளையில் 4 சடலங்கள் மீட்பு: நச்சு வாயு காரணமாக உயிரிழந்திருப்பதாகத் தகவல்

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2016 | 9:44 pm

தெஹிவளை – கவுடான வீதியின் மூன்று மாடி வீடொன்றில் இருந்து இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டவர்கள் நால்வரும் நச்சு வாயு காரணமாக உயிரிழந்திருப்பதாக பிரேதப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் அவர்களின் உறவுமுறை சிறுமி ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 65 வயதான ஹூசைன் மௌலான குறித்த வீட்டின் குடும்பத் தலைவராவார்.

அவரது மனைவியான 52 வயதான மிர்ஷிதா மௌலானவும் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

ஹூஸ்னா மௌலான எனும் 13 வயதான மகளும், 14 வயதான மிஷ்னா மௌலான எனும் உறவுமுறை சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது நச்சு வாயு காரணமாக உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த வீடு தற்போது முத்திரையிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்