டி20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி

டி20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி

டி20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2016 | 6:37 am

டி20 உலக கிண்ண தொடரின் சுப்பர் 10 சுற்றில் சொந்த மண்ணில் பலத்த எதிர்பார்பிற்கு மத்தியில் களமிறங்கிய இந்தியா தொடரை தோல்வியுடன் ஆரம்பித்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் 47 ஓட்டங்களால் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக்கிண்ண தொடரின் சுப்பர் 10 சுற்று நேற்று ஆரம்பமாகியது.

நாக்பூரில் நேற்று இடம்பெற்ற முதல் போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அன்டர்சன் 34 ஓட்டங்களையும் லுக் ரொங்கி ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் அஸ்வின், நெஹ்ரா, பும்ரா, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழத்தினர்.

127 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 79 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் தோனி 30 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சன்ட்னர் 4 விக்கெட்களையும் சோதி 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக மிச்சேல் சன்ட்னர் தெரிவானார்.

இன்று நடைபெறவுள்ள போட்டிகளில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்தியதீவுகள், இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்