சிறுநீரக நோய் ஒழிப்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறுநீரக நோய் ஒழிப்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறுநீரக நோய் ஒழிப்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2016 | 7:50 am

சிறுநீரக நோய் ஒழிப்பு தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய் ஒழிப்பு தொடர்பில் சீனாவின் விஞ்ஞான நிறுவனம் மற்றும் நீர் வழங்கல் – வடிகாலமைப்பு சபை ஆகியன இணைந்து நேற்று ஏற்பாடு செய்திருந்த செயலமர்வின்போது இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான சீன தூதுவர் ஷியான் லிங் யீ உள்ளிட்ட சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் கலந்துரையாடி தயாரிக்கப்பட்ட சிறுநீரக நோய் ஒழிப்பு தொடர்பான அறிக்கையை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

அண்மையில் ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக, இலங்கையில் சிறுநீரக நோய் ஒழிப்புக்கான தொழில்நுட்ப ஒத்தழைப்பை வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்