ஐரோப்பிய ஒன்றிய உயர்ஸ்தானிகர் நிவேக் மிமிகா இலங்கை வருகை

ஐரோப்பிய ஒன்றிய உயர்ஸ்தானிகர் நிவேக் மிமிகா இலங்கை வருகை

ஐரோப்பிய ஒன்றிய உயர்ஸ்தானிகர் நிவேக் மிமிகா இலங்கை வருகை

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2016 | 7:57 am

ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஒத்துழைப்புடனான அபிவிருத்தி விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நிவேக் மிமிகா உள்ளிட்ட பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்த பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான தொடர்புகளை வலுவூட்டும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஒத்துழைப்புடனான அபிவிருத்தி விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகரின் வருகை அமைந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட மட்டத்திலான பிரதிநிதிகளையும் இந்த குழுவினர் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விஜயத்தின்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஒத்துழைப்புடனான அபிவிருத்தி விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் இலங்கையுடன் 38 மில்லியன் யூரோக்களுக்கான உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக துறைகளில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்