உறுதியாக மேடையில் ஏறுவேன் – மஹிந்த ராஜபக்ஸ

உறுதியாக மேடையில் ஏறுவேன் – மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2016 | 7:30 pm

மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் இன்று கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர்.

பேராசிரியர் ஜகத் விக்ரமசிங்கவின் ஞாபகார்த்த நிகழ்வினை முன்னிட்டு கொழும்பில் இன்று பிற்பகல் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் பின்னர் நாளை நடைபெறவுள்ள கூட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மஹிந்த ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினர்.

ஊடகவியலாளர்: விசாரணை மேற்கொள்வதாக பொதுச் செயலாளரிடம் இருந்து கடிதம்…

மஹிந்த ராஜபக்ஸ: எனக்குக் கிடைக்கவில்லை.

ஊடகவியலாளர்: நாளை கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஸ: சென்றதன் பின்னர் அதனைப் பார்ப்போம்.

ஊடகவியலாளர்: நீங்கள் நாளை மேடையில் ஏறுவீர்களா?

மஹிந்த ராஜபக்ஸ: உறுதியாக மேடையில் ஏறுவேன்.

ஊடகவியலாளர்: ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஸ: அதுவும் ஒரு ஒழுக்கம் தான். நாம் செல்வது ஒழுக்கமாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்