இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியத் தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்

இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியத் தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2016 | 10:09 pm

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியத் தூதுவர் பீரீன் கஸன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு விஜயம் செய்த குழுவினர், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தொடர்ந்து யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்திருந்த தூதுவர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அவுஸ்திரேலிய அரசின் நிதியுதவியில் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண மீனவர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று கேட்டறிந்துகொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்