அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான அரச ஊழியர்கள் 12,000 பேருக்கு நிவாரணம்

அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான அரச ஊழியர்கள் 12,000 பேருக்கு நிவாரணம்

அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான அரச ஊழியர்கள் 12,000 பேருக்கு நிவாரணம்

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2016 | 7:44 am

கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான அரச ஊழியர்கள் 12,000 பேருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளின் பிரகாரம் இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவித்துள்ளார்

இதன் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாகரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பழிவாங்கல்களுக்கு இலக்கான சுமார் 30 ஆயிரம் பேர் இந்த குழுவில் முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்