அனைத்து மின் உற்பத்தி நிலையங்களுக்கும் இராணுவ பாதுகாப்பு

அனைத்து மின் உற்பத்தி நிலையங்களுக்கும் இராணுவ பாதுகாப்பு

அனைத்து மின் உற்பத்தி நிலையங்களுக்கும் இராணுவ பாதுகாப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2016 | 1:15 pm

அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் உப மின் நிலையங்களில் இராணுவத்தினரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

முப்படையை சேர்ந்தவர்களை இன்று காலை 6 மணி முதல் மின் நிலையங்களில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

பியகம மின் ஏற்பு உப நிலையமொன்றின் மின்மாற்றியில் ஏற்பட்ட வெடிப்பின் பின்னர், நாடு முழுவதும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இதனைக் கவனத்திற்கொண்டு மின் உபநிலையங்களில் இராணுவத்தினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்