வரட்சியான காலநிலையால் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

வரட்சியான காலநிலையால் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

வரட்சியான காலநிலையால் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2016 | 12:55 pm

வரட்சியான காலநிலையால் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளதாக சபை அதிகாரி ரஞ்சித் பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்த மாவட்டங்களில் நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் நிலவுகின்ற குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பவுஸர்கள் மூலமாக நீர் விநியோகம் செய்யப்படுகின்றன.

சுமார் 30 பவுசர்கள் இந்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்தார்.

வரட்சியான காலநிலையால் கொழும்பிலும் நீரின் தேவை அதிகரித்துள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரி கூறியுள்ளார்.

பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரஞ்சித் பாலசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்