கைதான இந்திய மீனவர்கள் 28 பேரும் விளக்கமறியலில்

கைதான இந்திய மீனவர்கள் 28 பேரும் விளக்கமறியலில்

கைதான இந்திய மீனவர்கள் 28 பேரும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2016 | 5:19 pm

யாழ் மற்றும் மன்னார் கடற்பரப்புகளில் பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இருவேறு சந்தர்ப்பங்களில் கைதான இந்திய மீனவர்கள் 28 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் கடற்பரப்பில் நேற்றிரவு கைதான 23 தமிழக மீனவர்களும் மன்னார் பதில் நீதவான் கயேஸ் ஃபெல்டானோ முன்னிலையில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவர்களில் இருந்த மூன்று சிறுவர்களை சிறுவர் பராமறிப்பு இல்லத்தில் சேர்க்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த மீனவர்களின் மூன்று படகுகளும் கடற்படையினரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான ஐந்து இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை பதில் நீதவான் ஆர். சபேஷன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மீனவர்களின் படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் ஐவரும் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இன்று காலை தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்