கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று

கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று

கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2016 | 11:42 am

இயற்கை எய்திய கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் கலகம ஸ்ரீஅத்த தஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று (13) இடம்பெறவுள்ளன.

தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் கலகம ஸ்ரீஅத்த தஸ்ஸி தேரரின் மறைவை முன்னிட்டு இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

தேரரின் இறுதிக்கிரியைகளை பூரண அரச மரியாதையுடன்​ நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து கண்டி நகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளன.

இன்று பிற்பகல் ஒரு மணி முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தேரரின் இறுதி ஊர்வலம் அஸ்கிரியவில் ஆரம்பித்து பிற்பகல் 2.30 அளவில் பொலிஸ் மைதானத்தை வந்தடையும் எனவும் அவர் கூறினார்.

அஸ்கிரியவிலிருந்து திருகோணமலை வீதியை வந்தடைந்து, நகர சபை சந்தியினூடாக , குயின்ஸ் ஹோட்டலுக்கு அருகில், தலதா மாளிகை ஊடாக வந்தடைந்து , அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரம் வரைக்கும் சென்று ,அங்கிருந்து பொலிஸ் தலைமையகத்தினூடாக வலது பக்கம் திரும்பி பொலிஸ் மைதானத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதனால் அவ்வீதிகளூடாக பயணிக்கும் சாரதிகள் குறித்த காலப்பகுதியில் மாற்றுவழிகளை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை தேசிய துக்க தினத்தை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள மதுபான சாலைகள் அனைத்தும் மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்