அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் அக்னியில் சங்கமம்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் அக்னியில் சங்கமம்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் அக்னியில் சங்கமம்

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2016 | 7:26 pm

இயற்கை எய்திய அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இன்று பிற்பகல் அக்னியில் சங்கமமானது.

கண்டி, அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் தேரரின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

இயற்கை எய்திய மகாநாயக்க தேரரின் பூதவுடலுக்கு மக்கள் மரியாதை செலுத்துவதற்காக அஸ்கிரி விஹாரையிலிருந்து இன்று பிற்பகல் பொலிஸ் மைதானம் நோக்கி வாகன ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

மத அனுஷ்டானங்களின் பின்னர் மல்வத்து பீடாத்தின் மகாநாயக்கர் வியன்கொட விஜிதசிறி தேரரினால் இறங்கல் உரை நிகழ்த்தப்பட்டது.

இதன் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறங்கல் உரையை ஆற்றியதை அடுத்து, கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் பூதவுடல் மகா சங்கத்தினரால் தகன மேடையில் வைக்கப்பட்டது.

அதனையடுத்து சமயக் கிரியைகளின் பின்னர் இயற்கை எய்திய அஸ்கிரி மகாநாயக்க தேர்ரின் பூதவுடல் அக்னியில் சங்கமமானது.

மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் முகமாக இன்று தேசிய துக்கதினமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதை முன்னிட்டு கண்டி நகரில் இன்று பிற்பகல் ஒரு மணிமுதல் விசேட வாகனப் போக்குவரத்து திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்