வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11,000 இற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2016 | 11:11 am

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 11,313 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 51.56 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவாகவுள்ள இடங்கள், சூழல்களை தொடர்ந்தும் துப்புரவாக பேணவேண்டியதன் அவசியத்தையே இந்த நிலைமை உணர்த்துவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மூன்று நாட்களுக்கும் மேல் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில், வைத்தியரை நாடி சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்