கிழக்கு பல்கலைக்கழக விவசாய,விஞ்ஞான பீட மாணவர்களுக்கான பதிவுகள் பிற்போடப்பட்டுள்ளன

கிழக்கு பல்கலைக்கழக விவசாய,விஞ்ஞான பீட மாணவர்களுக்கான பதிவுகள் பிற்போடப்பட்டுள்ளன

கிழக்கு பல்கலைக்கழக விவசாய,விஞ்ஞான பீட மாணவர்களுக்கான பதிவுகள் பிற்போடப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2016 | 3:40 pm

கிழக்கு பல்கலைக்கழக விவசாய மற்றும் விஞ்ஞான பீடங்களில் 2014 – 2015 காலப்பகுதிக்குரிய மாணவர்களுக்கான பதிவுகள் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நாளை மறுதினம் 14 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2014 – 2015 கல்வியாண்டிற்காக பதிவு செய்யுமாறு கோரப்பட்ட விவசாய மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களுக்கான பதிவுகளே பிற்போடப்பட்டுள்ளன.

இந்த இரண்டு பீடங்களுக்கும் சேர்த்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக மாணவர்களை சேர்த்துக்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலதிகமாக சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அவர்களுக்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக்கொடுப்பதற்கான கால அவகாசத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் விவசாய மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களின் பதிவுகள் பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலை, கலாசார பீட மாணவர்களுக்கான பதிவுகள் திட்டமிட்ட அடிப்படையில் நாளை (13) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்