‘மக்கள் சக்தி’ குழுவினர் அவலங்களுக்கு மத்தியில் வாழும் பலரை இன்றும் சந்தித்தனர்

‘மக்கள் சக்தி’ குழுவினர் அவலங்களுக்கு மத்தியில் வாழும் பலரை இன்றும் சந்தித்தனர்

‘மக்கள் சக்தி’ குழுவினர் அவலங்களுக்கு மத்தியில் வாழும் பலரை இன்றும் சந்தித்தனர்

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2016 | 9:30 pm

மக்களின் பிரச்சினைகளை இல்லங்கள் தோறும் சென்று ஆராயும் மக்கள் சக்தி குழுவினர், அவலங்களுக்கு மத்தியில் வாழும் பலரை இன்றும் சந்தித்தனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் நியூஸ்பெஸ்ட் முன்னெடுக்கும் ‘மக்கள் சக்தி’ இல்லங்கள் தோறும் திட்டம் 17 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் சக்தி திட்டத்தின் ஒரு குழுவினர் இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தின் குவாலுப்பே அன்னை திருத்தலத்திற்கு விஜயம் செய்து அங்கு ஆராதனைகளில் ஈடுபட்டனர்.

நாமல்வத்தை – நல்லக்கொட்டியாறு முஸ்லீம் கலவன் பாடசாலைக்கு மக்கள் சக்தி குழுவினர் விஜயம் செய்திருந்தனர்.

அதனையடுத்து மக்கள் சக்தி குழுவினர், இல்லங்கள் தோறும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டனர்.

நாமல்வத்தை கிராமத்தில், கொட்டில் வீட்டில்,வறுமையின் நிமித்தம் உண்ண உணவின்றி அல்லற்படும் குடும்பத்தினரின் துயரம் மக்கள் சக்தி குழுவினரின் கண்களை கலங்க வைத்தது.

மற்றைய குழுவினர் திருக்கடலூர் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

பாழடைந்த வீதியூடாக மக்கள் சக்தி குழுவினர் கந்தளாய், வான்அல பகுதிக்கு சென்றனர்.

இந்த பகுதி மக்கள் சுகாதாரமான குடிநீரினைப் பெற்றுக்கொள்ளமுடியாமையால் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இயற்கை வளத்தினை கொண்ட நாம்நாட்டில் குடிநீரினை பணம்கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை இந்த பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

மகாவலிபுர கிராம மக்கள் காட்டு யானைகளின் அசத்தின் மத்தியில் வாழந்து வருகின்றமை தொடர்பில் எமது குழுவினர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

சுகாதார நிலையமொன்று காணப்படாமையே, ஹத்தக கிராமத்தின் பிரதான பிரச்சினையாக காணப்படுவதாக
மக்கள் குறிப்பிட்டனர்.

மேலும் மன்னம்பிட்டி பகுதி விவசாயிகள் தாம் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் எமது குழுவினரிடம் தெரிவித்தனர்.

பிடிகல பகுதிநோக்கி நகர்ந்த எமது குழுவினரிடம், தாம் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் மக்கள் தெரிவித்திருந்தனர்.

ரத்தொட கனேதென்ன ஶ்ரீ பூர்வாராம விகாரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த எமது மற்றுமொரு குழுவினர், அம்பன்கங்ககோரல கம்மடுவ கிராமத்திற்கு சென்றனர்.

நாகர இங்குவத்த பகுதிக்கு சென்ற நியூஸ்பெஸ்ட் மக்கள் சக்தி குழுவினர் மக்களின் பிரச்சினைகளை எழுத்து மூலமாக பதிவு செய்தனர்.

வீதி புனரமைக்கப்படாமை இந்த மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகும்.

இதேவேளை மாத்தளை ரத்தொட, குருவாவ பாலம் உரிய முறையில் காணப்படாமையால், பிரதேசத்தின் வயல்நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளன.

இந்த பாலம் உரிய முறையில் நிர்மாணிக்கப்படாமையால், வீதியை ஊடறுத்து நீர் பாய்வதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மேலும் தனிநபர் ஒருவர் உரிமம் கோருவதன் காரணமாக, மயானமொன்று அற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

2012ஆம் ஆண்டில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும், நிகொலய் தோட்டப் பகுதிக்கும் நியூஸ்பெஸ்ட் குழுவினர் சென்றிருந்தனர்.

9 உயிர்களைக் காவு கொண்ட மண்சரிவு, ஏற்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் இடம்பெயர்ந்தே வாழந்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்