தங்கொட்டுவ பிரதேசத்தில் வேனொன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலங்கள் மீட்பு

தங்கொட்டுவ பிரதேசத்தில் வேனொன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலங்கள் மீட்பு

தங்கொட்டுவ பிரதேசத்தில் வேனொன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2016 | 8:07 am

தங்கொட்டுவ புதகம்பல பகுதியில் பாழடைந்த வீதியில் தீபற்றி எரிந்த வேனொன்றிலிருந்து சடலங்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 1 9 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலங்கள் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்றுள்ள இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்