சொத்து விபரங்களை வௌியிடாமை தொடர்பான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் துமிந்த

சொத்து விபரங்களை வௌியிடாமை தொடர்பான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் துமிந்த

சொத்து விபரங்களை வௌியிடாமை தொடர்பான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் துமிந்த

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2016 | 10:52 am

மூன்று வருடங்களுக்கான சொத்து தொடர்பான தகவல்களை வௌியிடாத குற்றச்சாட்டு குறித்தான வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதற்கமைய இந்த குற்றச்சாட்டிற்கான தண்டனை வழங்கும் திகதியை எதிர்வரும் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

2011 , 2012, மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் துமிந்த சில்வாவின் சொத்துகள் தொடர்பான தகவல்கள் வௌியிடப்படவில்லை என தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்