கைதிகளின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவு

கைதிகளின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவு

கைதிகளின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2016 | 9:00 pm

உண்ணாவிரதத்தை முன்னெடுத்துவந்த 13 தமிழ் அரசியல் கைதிகள் இன்று (11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்கக​ளை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்த கைதிகள் கொழும்பு நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக அரச சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

குறித்த கைதிகள் தமீழீழ விடுதலைபுலிகள் இயக்கம் மீளுருவாவதற்கு துணை புரிந்தவர்கள் எனவும், பலரின் கொலைகளுக்கு காரணமானவர்கள் என்பதாலும் பிணை வழங்கவோ அல்லது புனர்வாழ்வுக்குட்படுத்தவோ
முடியாது என அரச சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், குறித்த கைதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப் பகர்வு பத்திரம் வெகு விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் நீதிமன்றத்தில் அரச சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்ட நீதிமன்றம் கைதிகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்