கிழக்கு பல்கலைக்கழக தாக்குதலில் காயமுற்ற 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கிழக்கு பல்கலைக்கழக தாக்குதலில் காயமுற்ற 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கிழக்கு பல்கலைக்கழக தாக்குதலில் காயமுற்ற 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2016 | 11:51 am

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் காயடைந்த மாணவர்கள் நிலாவௌி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சித்த மருத்துவ பீட மாணவர்கள் மீது பல்கலைகழகத்தின் ஏனைய பீட மாணவர்களால் நேற்று மாலை 4.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தாக்குதல் தொடர்பில் 1 1 9 என்ற பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பில் நிலாவௌி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்