அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உண்ணாவிரதம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உண்ணாவிரதம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2016 | 9:18 pm

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை நல்லாட்சி அரசாங்கம் கவனத்திற்கொண்டு அதற்கான தீர்வைப்பெற்றுத்தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.

ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்