அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2016 | 12:36 pm

கடந்த 17 நாட்களாக உண்ணாவிரதமிருந்த அரசியல் கைதிகள் தங்களின் உண்ணாவிரதத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.

குறித்த கைதிகளை கொழும்பு இலக்கம் எட்டு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தங்களின் உடல் நிலையை கருத்திற்கொண்டு அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக அரசியல் கைதிகளின் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கைதிகள் தமீழீழ விடுதலைபுலிகள் இயக்கம் மீளுருவாவதற்கு துணை புரிந்தவர்கள் எனவும், பலரின் கொலைகளுக்கு காரணமானவர்கள் என்பதாலும் பிணை வழங்கவோ அல்லது புனர்வாழ்வுக்குட்படுத்தவோ முடியாது என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

அதற்கமைய கைதிகளின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டதை அடுத்து, உண்ணாவிரதத்தை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அருட்தந்தை மா.சக்திவேல் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்