யோஷித்த ராஜபக்ஸ தொடர்ந்தும் விளக்கமறியலில்

யோஷித்த ராஜபக்ஸ தொடர்ந்தும் விளக்கமறியலில்

யோஷித்த ராஜபக்ஸ தொடர்ந்தும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2016 | 1:20 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவரும் மார்ச் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீ.எஸ்.என்/ அலைவரிசையின் பணிப்பாளர்களான நிஷாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட்ட, அஷான் ரவிநாத் பெர்னாண்டோ மற்றும் கவிஷான் திசாநாயக்க ஆகியோர் யோஷித்த ராஜபக்ஸவுடன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதேவேளை யோஷித ராஜபக்ஸ உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கு பிணை வழங்குவது தொடர்பில் ஆராய்வதை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்